வீரபாண்டி தேரு
விதையாய் நிலத்தில் வீழ்ந்தேன்
ஈரத்தால் முளைத்து மேல்வந்தேன்
மரமாய் உயர வளர்ந்தேன்
வாளால் வெட்டி சரிந்தேன்
மரகிடங்கில் சரக்காய் முடங்கினேன்
விறகாய் வீணாய் போயிருப்பேன்
இறைவன் அருள் பார்வையால்
ஸ்தபதியின் கண்ணில் தென்பட்டேன்
உளியால் சிற்பங்கள் செதுக்கப்பட்டேன்
அச்சானியால் சக்கரம் பூட்டப்பட்டேன்
இறைவி கௌமாரி அம்மன் வலம்வர
இடமெங்கும் தரிசனம் பெற்று மிளிர
வீரபாண்டி கோயில் தேரானேன் ...
வீரபாண்டி கோயில் தேரானேன் ...