விழியே- செவியே- என் வாயே

எதிரி கொடுத்த
நெருக்கடியிது -நானே
எழுதி வைத்த
என் தலைவிதியிது
ஏற்றிவிட
ஏணிகள் வேண்டாம் -எனை
தேற்றிவிட
ஞானிகளும் வேண்டாம்.

இக்கணம்
மொழியறிவும் குடித்திடவில்லை
இலக்கணம்
மொத்தமும் அறிந்திடவில்லை- தனி
இலக்கணங்களை
எனக்கென்று படைத்திடுவேன் -என்
இலக்குகளை
வெறிக்கொண்டு எழுதிடுவேன்.

விழியே !என் விழியே..!
தூங்காதே..!
தூங்கினால்
கனவுகள் சோர்ந்துவிடும்
சோர்ந்தால்
இலட்சியங்கள் செத்துவிடும்
செத்தால்
இப்பிறவி அற்பமாகிவிடும்.

செவியே..! என் செவியே..!
கேட்காதே..!
எவரோ எனை
இழிவாய் பேசட்டும்.
அதுவே போலி
மேதாவிகளின் தம்பட்டம்-
இவைகளை எவைகளையும் நீ
கேட்டாலும். புறந்தள்ளிவிடு குப்பைத்தொட்டியிடம்.!
.

வாயே..! என் வாயே..!
பேசாதே.!
கண்டதை பேசியிங்கே
கம்பீரத்தை இழக்காதே..!- ஒரு
கனவுமேடையுண்டு
இலட்சிய உரையுண்டு
உன் வாய்சவாடலுக்கு
உனக்கொரு வாய்ப்புண்டு.

அப்போது .....
நீபேசி அசத்து -பின்பு
துரோகிகளின் முகத்திலென்
வெற்றியை நீ துப்பு.

--இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (12-May-14, 1:36 pm)
பார்வை : 305

மேலே