வாழ்க்கையை உனக்காய் வாழு
மனிதனோடு பகட்டாய்
வாழ்வதை விட
உன் மனதோடு
பணிவுடன் வாழ்ந்துபார்..
வாழ்க்கையே
புதுமையாக
தெரியும்....!!
உலகில் எதுவும்
நிரந்தரமில்லை..
வாழும்வரை உன்னை
விரும்பியே
உனக்காக வாழு..!
அன்பின் உறவுகள்
பிரிவில் என்றும்
ரணங்களையே
நினைவின்பரிசாய்
தந்து போகும்...!!
தனிமையை அதிகமாய்
ரசித்து அனுபவி அதுவே
ஓர்நாள் உனக்கு
துணையாகவரும்..!!
உண்மையை
அதிகமாய்
நேசித்துபார்
இந்த உலகமே
உன்னை வெறுப்பது
புரியும்..!!
பொய்களுக்காய் தினம்
தலை சாய்த்துபார்
ஓர்நாள் உன்னுயிரே
உன்னை கேவலமானவன்
என்று சபிப்பது தெரியும்..!!
வாழும் நாட்கள்
சிறுதாயினும்
உனக்கென்ற
தனி வரைமுறை
வகுத்தே வாழ்ந்திடு..!
பொய்களுக்காய்
உலகோடு சேர்ந்து
வாழ்வதை விட..
உண்மைக்காக
உன்னுயிரோடு
இணைந்து
மீள்வதே நல்லது..!!
...கவிபாரதி...

