யார் அழகு

நேற்றிரவு என் கனவில் கடவுளோடு பட்டிமன்றம்..
அவன் படைத்த இயற்கையில் அழகு எது என்று..
நீரா, நெருப்பா?
நிலமா, வானமா?
நிலவா, மலரா?
மழையா, மேகமா?
பனியா, காற்றா?
இவற்றில் எது அழகு என கடவுள் கேட்க, நானும்..
நீரில்லை, நெருப்பில்லை,
நிலமில்லை, வானமில்லை,
நிலவில்லை, மலரில்லை,
மழையில்லை, மேகமில்லை,
பணியில்லை, காற்றுமில்லை.....
இவை அனைத்தையும் விட
உன் படைப்பில், மிக மிக அழகு
என்னவனும், என் மீது அவன் காட்டும்
அன்பும், காதலும் மட்டுமே என்றேன்..
என் பதில் கேட்டு திகைத்த கடவுளும், வாதத்தில் ஜெயித்தது நீயே என்றார்..!
ஆனால்.. உண்மையில் ஜெயித்தது
கடவுள் தான்.. ஏனெனில்
அழகாய் உனை படைத்ததும்,
எனக்கென உனை தந்ததும்,
அந்த கடவுள் தானே? !!

எழுதியவர் : சுதா ஆர் (12-May-14, 10:17 am)
Tanglish : yaar alagu
பார்வை : 126

மேலே