கனவு கன்னி
உம்
நீல நாக கண்களால்
மாணிக்க கற்களுக்குள்ளே
சலசலப்பு!
உம்
செம்மாதுளை இதழ்களால்
மூக்கனிளுக்குள்ளே
சலசலப்பு !
உம்
சென்டிமீட்டர் புன்னகையால்
ஆழிக்கடல் முத்துகளுக்குள்ளே
சலசலப்பு!
உம்
நறுமண வீசும் கேசத்தால்
சந்தனக் கட்டைகளுக்குள்ளே
சலசலப்பு!
உம்
அன்புக் கதிர்களால்
சூரியப் பகவானுக்குள்ளே
சலசலப்பு!
இத்தனை செய்யும்
உம்மைக் கட்டி
அணைக்கலாமா?
இல்லை
உனக்குள்ளே
கரையாலாமா?