மூழ்கியதில் செத்துவிடு

கோவிலின் கருவறையில் வாழும் தெய்வங்களை விட
தெய்வங்களுக்குள் வாழும் கருவறைகள் அதிகம்
கருவறை தெய்வங்கள் வயிற்றினில் மட்டுமல்ல
நெஞ்சிலும் சுமந்திருக்கும் செத்தும்கல்லறைக்குள்

கண்ணெதிரே வாழ்ந்திடும் நடமாடும் தெய்வங்கள்
பேசிடும் மானுடம் வாழ்ந்திட வாழ்ந்திடும்
விதைத்திடும் உன்னை வளர்த்திடும் தொட்டியில்
மனதிலும் ஊஞ்சல் கட்டி தாலாட்டும் தொட்டிலில்

பதித்திடும் உயிரினை ;கருவினில் வடித்திடும்
பகிர்ந்திடும் தன் உணவை கருவறை முதலே
பதித்திடும் தன் உணர்வை நமக்குள் நற் குணமாக
யார் குழந்தை என்று முத்திரை பதித்திடும்

யார் என்ன சொன்னாலும் எது சொல்லித்தடுத்தாலும்
ஏங்கிடும் வாடிடும் விழிநீரினில் காட்டிடும்
வயிற்றினில் உதைத்தாலும் முகத்தினில் உமிழ்ந்தாலும்
, சோறிட மறுத்தாலும் கும்பிட மறந்தாலும்

கூப்பிட்ட குரலுக்கு தெய்வம்கூட ஓடிவரும்
அழைத்திட மறந்தாலும் தாய்தெய்வம் ஆடிவரும்
நீ அழுதால் தான் கலங்கும் ஈரமனது தெய்வமவள்
கண்கள் குளமானால் மூழ்கி அதில் செத்துவிடு

எழுதியவர் : டாக்டர் த அ குமார் (12-May-14, 10:39 am)
பார்வை : 112

மேலே