காலத்தால் அழியாத அதிசயம்
அன்பென்னும் பாலுட்டி !!
அறிவென்னும் உணவூட்டி !!
அறநெறியில் திகழ தாலாட்டி !!
அகிலம் போற்ற சீராட்டி !!
அன்றும் இன்றும் என்றும்
அயராது உழைத்து – எங்களுக்காக
அணுஅணுவாய் சிதைந்து, மக்கள்
அனைவரும் போற்ற வளர்த்தாயே !!
முரடனையும் முத்திரை பதிக்க செய்தவள் !!
முழுநிலவை காட்டி கற்பனை வளர்தவள் !!-எதிலும்
முதல்வனாக்க முழு மூச்சை தந்தவள் !!
முன்னேறிச்செல்ல முழுமுதற் கடவுளானவள் !!
அன்பில் அன்பிலும் அன்பாய் !!
அழகில் அழகிலும் அழகாய் !!
அறிவில் அறிவிலும் அறிவாய் !!
அதிசயத்தில் அதிசயத்திலும் அதிசயமாய்!!-காலத்தால்
அழியாத அதிசயத்தின் அதிசயமே அம்மா அம்மா !!!