தாய்

அன்பின் உறைவிடம் அம்மா அவளன்றி
இன்பம் எதுவோ இயம்பு?
ஒப்பீடு இல்லா உயர்தெய்வம் ஒன்றென்றால்
இப்புவியில் நாமெல்லாம் தப்பாமல் முப்பொழுதும்
எப்பொழுதும் போற்றுதற்கு தாய்!
மண்ணிருக்கும் நம்மை மடிசுமந்து பெற்றெடுத்துக்
கண்ணிமைபோல் காக்க கடவுளால் பெண்ணாகி
அன்னை உருவெடுத்து ஈடற்ற அர்ப்பணிப்பால்
தன்னை கொடுப்பாளே தாய்!
கண்ணில் மிளிரும் கவிதை பொருளுமாய்
வண்ண மலராய் மனமென்னும் விண்ணின்
தண்சூழ் நிலவாய் தழுவும் தென்றலாய்
எண்ண இனிக்கும் இதயக் கனியாய்
உண்ண உணவாய் உறங்க பாயாகும்
பெண்ணோ சிலநேரம் பேயாவாள். என்றாலும்
மண்ணில் அவளன்றோ மா!