உன் பிறப்பு

கரு விழி ஓரம் ,
மழை வந்து வழிய ,
கருவறை தெய்வம் , தூக்கம்
கலைந்து நீ வந்தாய் ,
ஒரு விழி வலியில் தூங்க ,
மறு விழி மகிழ்ச்சியில் ஏங்க,
மறு பிறவி நான் எடுத்தேன்
ஒரு முறை உன் முகம் காண .

ரத்தத்தை நான் உருக்கி
மொத்தமாக உனக்கு ஊட்ட
பித்தம் தாளாமல் நீ உமட்ட
நித்தம் நித்தம் நான் மெலிந்தேன் .
முத்தம் தினம் உனக்கு தந்தேன்
சத்தம் ஏதும் இன்றி ,
யுத்தங்கள் பல கண்டேன்
கண்ணே நீ உறக்கம் இன்றி அழுகையிலே

எழுதியவர் : சக்திவேல் சிவன் (15-May-14, 1:49 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
Tanglish : un pirappu
பார்வை : 147

மேலே