கண்ணா உன்னக்காக
அகரமெனத் தொடங்கி,
ஆண்டாள் போல் பாசுரம் பாடத் தெரியவில்லை..
இப்பொழுது மட்டுமல்லாமல் எப்பொழுதும்
ஈன்ற தாயை மறவாதது போல்
உன்னை நினைகாத நொடியில்லை..
ஊடுருவி உள்ளத்தில் பதிந்த கண்ணா!!
எங்கும் நிறைந்திருக்கிறாயென தெரிந்தும்
ஏங்குகிறது மனது உன்னை காண..
ஐயம் புகுந்தாலும் உன் அன்பைபெற,
ஒருமுறையல்ல பலமுறை பிறப்பேன்-தஞ்சம்புக!!
ஓங்கி உலகளந்த உன்னை மறவேன்..
ஔதிகம் படைப்பேன் கண்ணா உனக்காக!!!!!