நீ உன் கணவனுடன் நான் உன் நினைவுகளுடன் 555

என்னவளே...

உன்னை முதன்
முதலில்...

திருவிழா கூட்ட
நெரிசலில் கண்டேன்...

அன்று முதல் என் நித்திரையில்
வந்து சென்றாய்...

என்றேனும் உன்னை
சந்திபேனா என்று ஏங்கினேன்...

நான் சென்ற இருசக்கர
வாகனம் விபத்து...

எழுந்து
பார்த்த போது...

என்னை சுற்றி இருந்த
கூட்டத்தில் நீ இருந்தாயடி...

உன்னை நான் மீண்டும்
காணவே விபத்து...

இல்லையேல் நான்
சென்று இருப்பேனடி...

பட்டாம் பூச்சியாய்...

முதல்முறை
உன் விழிகளை...

என் விழிகள்
சந்தித்தது...

சிந்திக்காமல் நான்
என்னை இழந்தேன்...

உன்னிடத்தில்...

பௌர்ணமி நிலவாக
நீ இருந்தும்...

நான் இருளில் இருந்தே
உன்னை ரசிக்கிறேன்...

எங்கோ உன்
கணவனுடன் நீ...

உன் நினைவுகளுடன்
நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-May-14, 10:55 pm)
பார்வை : 506

மேலே