அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் 1
(இக்கட்டுரை தொடர்கள் வேலூர் மண்ணில், 'சுடச்செய்தி' பத்திரிக்கையில் வெளிவந்தது)
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம் ...
(மதத்திற்கு மனிதனைப் பிடிக்கலாம் ...
மனிதனுக்கு மதம் பிடிக்கலாமா ...?)
"அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்".
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்". - இறைவனை நாம் கண்டதில்லை. அன்னையும், பிதாவும் நாம் கண்டறிந்த தெய்வங்கள். முன்றேன்றங்கள். இவர்கள் காட்டிய வழியில்
நாம் நடப்பதால், இவர்கள் நம் முன்னேற்றத்தின் ஏணிகள் .
இனிமையும், துன்பமும், வறுமையும் நம் வாழ்க்கையின் இடையே. இளமையில் கல், இனியவை பழகு, இயன்றவரை மற்றவர்க்கு உதவு, இன்சொல், இவைகள் நம்மை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டும்.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு. வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கிணற்றில் தண்ணீர் அள்ள, அள்ள நீர் சுரந்துக் கொண்டே இருக்கும். அது போல் நாம் வாழ்க்கையில் கல்வியை பயில வேண்டும். வாழ்க்கை கல்வியையும் பயில வேண்டும். இல்லையேல், வாழ்க்கை பாதையில் பலவித ஏற்றத்தையும், இறக்கத்தையும் காண நேரிடும்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். நம் நேரம் நன்றாக இருக்கும்போதே, இயன்றவரை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். நாம் நம் வாழ்க்கையை அமைப்பது, நாம் சமைப்பதற்கு சமமாகும். சமையல் நன்றாக அமைந்தால், உணவுகள் சரியாக பரிமாறப்படும். வாழ்க்கை நன்றாக அமைந்தால், உறவுகள் சரியாக அமைய உதவும்.
மதம், ஒவ்வொருவரும் சார்ந்து நிற்பது. ஆனால், மதத்திற்காக நம்மிடையே மதம் பிடித்தால், நாம் மட்டுமல்ல, நம்முடைய சமூகமும் சேர்ந்து அழிந்துவிடும். உலகில் ஒவ்வொரு உயிரும் முக்கியமானது. இதில் நாம் ஏற்றத தாழ்வை பார்க்கக்கூடாது. மதம் சார்ந்த சகோதரத்தைவிட
மனம் சார்ந்த சகோரத்துவம் முக்கியமானது. எங்கேயோ தெரியும் இயல்புகளுக்கு, நாம் பழகும் நம் மக்களிடையே ஏன் துவேசம். இனத்தை மறந்து, மனித நேயத்தை நாடு.
நாடு என்பது நாம் அனைவரும் நாடி இருப்பது. நம்மில் நாமே நாடி இருப்பதால், அது நாடு ஆனது. இன்றைய வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் நாடி நிற்கின்றோம். ஒற்றுமையாக நாம் இருந்தால், நம் உறவில் வலிமைக் கூடும். வெளியிலிருந்து நமக்கு அச்சுறுத்தல் இருக்காது. நம்மையே நாம் ஏன் பலவீனமாக காட்டிக் கொள்ளவேண்டும். ஒற்றுமை ஒன்றே நமது நோக்கமாக இருக்க வேண்டும்...
ந தெய்வசிகாமணி