வண்ணத்து பூச்சியும் பூவும்

... "" வண்ணத்து பூச்சியும் பூவும் ""...
வட்டமிட்டு வட்டமிட்டு
வான் பறந்த பூச்சி
மொட்டவிழ்க்கும் பூத்தேடி
காத்திருக்கும் பூச்சி
பூவுக்கும் நோகாமல்
வந்தமர்ந்த பூச்சி
வண்ண வண்ணமாய்
வண்ணத்து பூச்சி
வந்தமர்ந்த பூச்சிக்கு
வாஞ்சையாய் வாய்திறந்து
வருடுகின்ற தென்றலோடு
சிறு தெம்மாங்கு பாடி
இருப்பதை கொடுத்து
இருந்ததை எடுத்து
மகரந்த சேர்க்கைக்கு
தேனினை பரிசளித்து
தேவைதனை தீர்த்துக்கொண்ட
நேரங்களை இன்பமாக்கி
மனம் மகிழ்ந்து மதி மயங்கி
பூவோடு வண்ணத்துப்பூச்சி .....
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...