தவிப்புக்குள் சிரிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு கேட்டேன்
ஆப்பிள் வாங்கிதந்தாய்..
பாசம் கேட்டேன்
பால்கோவா வாங்கிதந்தாய் ...
சந்தோசம் கேட்டேன்
சாக்லேட் வாங்கிதந்தாய் ...
நிம்மதி கேட்டேன்
நெய் மிட்டாய் வாங்கிதந்தாய் ...
வாழ்க்கை கேட்டேன்
வடை வாங்கிதந்தாய் ....
உறவு கேட்டேன்
உணவு வாங்கிதந்தாய் ...
என் காதல் உன்னில்
உன் காதல் உணவில் ..........
என் தவிப்புக்கும்
உன் சிரிப்புக்கும்
இடையில் ........
" நம் காதல் ........!!!!!!!!!!"