பேரன் குறள்கள்- 11

யோரன் குறள்படித்து யோசித்தது:-குறள் யாப்பு -

இருதயச் சுத்தி எதற்கு?, குழந்தைப்
பிறவியாய் என்றும்,இருப் பின்!----------------------------------------------101

புன்கணீர் அல்ல,நீ பேரனே! பூமுதல்வன்
தன்கணீர் தந்த அருள்!-----------------------------------------------------------102

இன்சொல்லைக் கேட்டோர் இனிதென்பர்! என்பேரன்
தன்முகம் பார்க்காத தால்!-----------------------------------------------------103

பண்பினில் நீங்கா பகுத்துண்ணும் அன்பனாய்
என்பேரா! என்றும் இரு!---------------------------------------------------------104

நாளெலாம் அன்பை நலிவின்றிக் கொட்டுவாய்;
காமதேனும் உன்னுள்ளே யோ?---------------------------------------------105

சமயம் சமைதல்; சழக்குகள் நீக்கி
அமைதல் அதுவுன் இயல்பு!---------------------------------------------------106

இறைவழி பாடின்பம் ஏன்மனித ரென்பார்
துற!அவரைத் தூக்கி எறி!-------------------------------------------------------107

உலகியல் வாதத்தில் ஊறி,நிற் பாரால்
கலகமோ கண்ட பயன்?---------------------------------------------------------108

உலகின் உயிர்களுக்(கு) ஊறுசெய்து வேறோர்
உலகமும் வேண்டுமோ உனக்கு?-------------------------------------------109

ஏர்க்களமும் போர்க்களமும் எண்ணி,நீ பார்த்தவனாய்
ஏர்க்களத்தை ஏற்ற எழு!--------------------------------------------------------110

====== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-May-14, 7:53 am)
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே