சிறப்புக் கவிதை 36 விமர்சனம் - அம்மாவும்அணில் குஞ்சும் ர்மேஷாலாம்

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கவிதை.. படைப்பு முழுவதும் ஒரு.. அழகியல்.... அரவணைப்பு நெடுகிலும் நிரம்பிக் கிடக்கிறது. அணில் விளையாட்டுக்கள் நேரில் பார்த்திருக்கிறேன்.... இக்கவிதை படிக்கும் பொழுது எனக்கு ஒரு சிறு குழப்பம்..!! எது உண்மை..? வால்தூக்கி தென்னையில் கீழிறங்கும் அணில்.. விளையாடுகிறது என்றே என் சிற்றறிவில் இடித்துக் கொண்டிருந்தது இவ்வளவு நாளும்.. இப்படி ஒரு பகிர்தல் இருப்பதை இக்கவிதையின் மூலமாக உணர்கிறேன்..

"அம்மாவைத் தேடி வருகிறது...
அணில் குஞ்சு.

அதற்கு....
வேறு யாரும் பொருட்டில்லை."

எவ்வளவு பேர் உணர்ந்தீர்கள் எனத் தெரியவில்லை. இக்கவிதையில் அப்பாக்களுக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதையும் உணர்த்தத் தவறவில்லை கவிஞர். இவ்வகையில் அப்பாக்கள் எல்லாம் துரதிர்ஷ்ட்டசாலிகளே.

"ஒருபோதும் வருவதில்லை...
அம்மா இல்லாத வீடுகளுக்கு."

படிக்கும்பொழுது எவருக்கும் கொஞ்சம் தொண்டைக்குழி இடறும்.. குறிப்பாக அம்மாவை பிரிந்தவர்களுக்கும்.. பிரித்தவர்களுக்கும்.

"பின்....
யாரும் அறிய முடியாத ஒரு
முகக் குறிப்பில்...
"நாளை" வருவதாய்...
அம்மாவிடம் மட்டும் சொல்லிக்
கிளையேறி ஓடி விடுகிறது.. "

இந்த வரிகளில் தான் கவிஞர் யாரும் தொட முடியாத ஒரு சிகரத்திற்கு நம்மை அழைத்துச் சென்று விடுகிறார். சில்லிடுகிறது வரிகள். ஒரு அம்மாவிற்கும் குழந்தைக்குமான நேரலைகளை .. புரிதல்களை... பகிர்வுகளை இவ்வளவு அழகாக அதன் மென்மையும் மேன்மையும் மாறாமல் இவர் ஒருவரால்தான் எழுத முடியும்.

அம்மாவும் அணில் குஞ்சும்... காணொளி விருந்து...!!!

எழுதியவர் : சரவணா (16-May-14, 10:09 am)
பார்வை : 121

மேலே