நகர மறுக்கும் நினைவுகள் – 8 - நான் வரைந்து வைத்த சூரியன்

படம் : ஜெயங்கொண்டான்.
இசை : இசைஞானிக்கு அடுத்து நான் நேசிக்கும் வித்யாசாகர்
பாடல் : யுகபாரதி


ஒரு நாள் வெளிநாட்டில் இருந்து ஒரு நண்பன் தொலைபேசியில் அழைத்தான்.
நான் ஒரு 'ஹம்மிங்' சொல்றேன். அது என்னா படம் என்னா பாட்டுன்னு சொல்லு.
'தெரியலடா'
'இல்ல அந்த பாட்ட FM வானொலியில் கேட்டுக் கொண்டே car ஒட்டினேன். படம் பேர் தெரிஞ்சா சொல்லு.

தீடிரென ஒரு நாள் அந்தப் பாட்டைக் கேட்க நிகழ்ந்தது. அப்பாடல் வரிகளுக்காக பல முறை இப்பாடலைக் கேட்டிருக்கிறேன்.

தலைவி தலைவன் கன்னத்தில் முத்தமிடுகிறான். தலைவன் மற்றொரு கன்னத்தைக் காட்டுகிறான். தலைவி சிரித்து விட்டு நடக்க ஆரம்பிக்கிறான்.

இசை ஆரம்பமாகிறது.

தலைவன் தலைவியை பின்னால் இருந்து தழுவிக் கொள்கிறான்.

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

சிறந்த கவிதைக்கான அனைத்துக் கட்டுக் கோப்புகளுடன் பிற மொழி கலவாமல் அழகிய சந்தங்களுடன் ஒரு பாடல்.

தலைவன்
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

தலைவி
கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

தலைவன்
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
மனது புன்னகைப்பதால் பறக்க ஆரம்பிக்கிறது

தலைவி
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக
தலைவியும் சளைத்தவல் அல்ல. பெயர் கூறுவதால் அந்த நாட்கள் இனிப்பாக ஆகின்றன.

தலைவன்
தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்
நிலை தடுமாறுதல் நிகழ்கிறது ஆனால் அது மகிழ்வாக.

தலைவன் தன் நிலை விளக்கம் தருகிறான். காதலைக் கற்றுக் கொண்டதை உணர்த்துகிறான்.
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

தலைவியும் தன்னிலை விளக்கம் தருகிறாள். தான் முல்லைப் பூவாக தொடுக்க தயாராக இருப்பதை உணர்த்துகிறாள்.
நல்ல முல்லை இல்லை நானும் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

தலைவன் தன் தவிர்ப்பை தெரிவிக்கிறான்.
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்

தலைவி பதில் உரைக்கிறாள்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சம்
கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்


எல்லா நினைவுகளுக்கு பின்னும் இருக்கின்றன இறகின் சிறகசைப்புகள். அதனால் தான் இன்னும் காலம் கடந்து சூரியன் ஒளிர்கின்றது.

எழுதியவர் : அரிஷ்டநேமி (16-May-14, 6:08 pm)
சேர்த்தது : அரிஷ்டநேமி
பார்வை : 189

சிறந்த கட்டுரைகள்

மேலே