பிண்ட பிரதானம்
தாயின் இறப்பிற்கு பிறகு கயாவில் சிரார்த்த பிரதானம் (இறுதி சடங்கின் ஒரு நிகழ்ச்சி) "மாத்ரு ஷோடசி " என்ற பெயரில் 16 பிண்டங்களை அன்னைக்கு சிறப்பாக வழங்குவது ஒரு நியதி.
மகன் தன் கடமையை ஆற்ற தாயின் தியாகங்களை ஒரு முறையேனும் நினைத்து பார்க்கவும், தாயின் அளப்பரிய தியாகத்தை உணரவும் ஒரு வாய்ப்பாகும். கண்களில் நீர் வர வைக்கும் 16 பிண்டங்களின் அர்த்தங்கள் :
1. என்னை கர்ப்பத்தில் தாங்கியபடி மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது என் தாய் வேதனைகளை அனுபவித்தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன் .
2. ஒவ்வொரு மாதத்திலும் பிரசவத்தின் போதும் என் தாய்க்கு என்னால் ஏற்பட்ட வேதனைகள் உண்டாக்கிய பாவத்திற்கு பரிகாரமாக இப் பிண்டத்தை தருகின்றேன்.
3. என் தாயின் வயிற்றில் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்கு சேர்த்த பாவ மூட்டைக்கு பரிகாரமாக இந்த , பிண்டத்தை தருகின்றேன்.
4. நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னை சுமந்த போது அவளுக்கு உண்டான வேதனைகளுக்காக எனக்கு சேர்ந்த பாவத்தை போக்க இப் பிண்டத்தை தருகின்றேன் .
5. என்னை வியாதிகள் தாக்காமலிருக்க கசப்பான மருந்துகளை சாப்பிட்டா ளே ,என் தாய் அவளுக்கு நான் செய்த கொடுமைகளினால் உண்டான பாவத்தை போக்க பரிகாரமாக இப்பிண்டத்தை தருகின்றேன்
6. நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி பசியென்னும் நெருப்பால் வெம்மையால் நொந்து போனாளே அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த கொடுமையினால் எனக்கு விளைந்த பாவத்திற்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன் .
7. இரவில் நான் என் தாயின் ஆடைகளை மல மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன்
8. எனது பசி தாகம் தீர்க்க (தனக்கு இல்லை என்றாலும்) அவ்வபோது உணவும் நீரும் எனக்கு தந்தாளே என் தாய், அவளை வருத்திய பாவத்தை போக்க பரிகாரமாக இப் பிண்டத்தை தருகின்றேன்
9. அல்லும் பகலும் என் தாயின் முலைப்பாலை அருந்தும் போது அவளை நான் துன்புருத்தினேனே அதனால் விளைந்த பாவத்திற்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன்
10 கோடையில் என்னை காக்க தன் உடலை வருத்தி கொண்டாளே என் தாய் அவளுக்கு நான் தந்த துன்பங்களால் விளைந்த பாவங்களை போக்க இந்த பிண்டத்தை தருகின்றேன் .
11. மகன் நோய் வாய் பட்டானே என்ற கவலையால் வாடி இருந்தாளே. என் தாய் அவளுக்கு விளைவித்த மன துயருக்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன்
12 கோரமனவற்றை எல்லாம் கடந்து செல்வதற்கு துணை நிற்பதற்காக இப் பிண்டத்தை தருகின்றேன்.
13 என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்கு பரிகாரமாக அறிவிசால் புத்திரர்கள் அவர்கள் தாய்க்கு செய்வதை ஒப்ப இப் பிண்டத்தை நான் தருகின்றேன்
14 நான் நன்கு வளவர்தர்க்காக தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட கஷ்டப் பட்டாளே, அந்த தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்கு பரிகாரமாக இப் பிண்டத்தை தருகின்றேன்
15. கர்ப்பத்திலும் சிசுவாக இருந்த போதும், மரண வேதனை ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்கு தந்தமைக்கு பரிகாரமாக இந்த பிண்டத்தை தருகின்றேன்.
16 தாயின் கர்ப்பத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை போன்றவற்றால் வந்த வேதனைகளால் எனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க பரிகாரமாக இப் பிண்டத்தை தருகின்றேன் .
தாயின் தியாகங்களுக்கு மரியாதையுடன் தலை வணங்குவோம் !