புரிந்து கொள்வோமே

எப்போதாவது நாம் நம்மையே
காட்டிக் கொள்வோமா
நா நல்லவன்(ள்) கெட்டவனெ(ளே)என்று ..!

உண்மையாய் பழகிப் பேசிப்
பார்த்தோமா எல்லோரிடமும்
நல்லவன் (ள்) என்று அனைவரும்
நம்மைப் பாராட்ட வேண்டுமென்று ...!

நாம் ஒன்றைப் புரிந்து கொள்வோம்
இயற்கையை ரசிப்போம் அதன்
குணங்களையும் இனிமையையும்...!
என்றாவது உணர்ந்தோமா ?
பலாப்பழம் இனிக்கும் கசக்கும் என்பதை
நாம் அதனை உரைத்துப் பார்க்கும் வரைதான் ...!

பலாப் பழத்தைப் பார்ப்பதற்கு
அருவருப்பாய் தோன்றும் ஆனால்...!
நாம் அப்படியே சாப்பிடவோ
பறிக்கவோ முடியாது.
அது(பலா ) தானேயும்
தன்னைக் காட்டிக் கொள்ளாது ...!

எத்தனை கஷ்டப் பட்டு அது
பழுத்தபின் நாம் பொறுமையாய்
காத்திருக்கின்றோம் ..அது போல ...!

அதன் குணமும் மணமும்
தானாகவே காண்பித்துக் கொள்வதில்லை
அதனை நாம் தான் உடைத்து உரித்து
புரிந்து கொள்கிறோம் ...அதே போன்று ..

வாழை ,மா , தெங்கம் பழம் என
எண்ணிலடங்கா பழங்களும் நமக்கு
பாடம் கற்பிக்கின்றன
தாம் நல்ல குணம் கொடுக்கும் வள்ளல்
இனிமை குணம் என்பதை ...!

இதனை பார்த்து நாமும்
நம்மைப் புரிந்து மற்றவர்களையும்
புரிந்து கற்று தெளிந்துகொண்டு வாழ்வோமே...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-May-14, 10:04 am)
பார்வை : 137

சிறந்த கட்டுரைகள்

மேலே