பேரன் குறள்கள்- 12

யோரன் குறள்படித்து யோசித்தது:=குறள் யாப்பு=

குறவஞ்சி பள்ளு,கொண் டாடுக! வெள்ளை
நிறவஞ்சிக் கல்வி நிறுத்து!--------------------------------------------------111

அறிவில் வளர்க!நல் அன்பினில் ஓங்கு!
செறிவுறும் உன்னால் உலகு!-----------------------------------------------112

சாத்திரம் போற்றினும் சாதிகள் தூற்றிடு!
மாத்திடக் கூடும் உலகு!------------------------------------------------------113

உண்மை தவறி உரைப்பது பொய்யெனும்
பண்பை ஒதுக்கிப் பழகு!------------------------------------------------------114

கல்லணை கட்டினோர் கைவலி பேசலின்
நல்லன செய்வதை நாடு!----------------------------------------------------115

சொல்லணை கட்டியே சோர்வுசேர்க் கின்றவர்
நல்லவர் இல்லையாம் நம்பு!-----------------------------------------------116

தன்னைத் திருத்து! தகைமை பெருக்கு!பின்
உன்னைத் தொடரும் உலகு!------------------------------------------------117

இனப்பெருமை பேசி இழிதகைமை போற்றின்
வனக்கொடுமை நாட்டுள் வரும்!------------------------------------------118

ஒன்றலில் இல்லை உயர்வு;நின் ஒற்றுமை
நன்றினுக் கில்லையேல் நஞ்சு!--------------------------------------------119

விண்ணை அளத்தலின் மிக்க,நன் றாகும்,உன்
மண்ணை அழிக்கா மதி!------------------------------------------------------120

======== =========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (16-May-14, 3:34 pm)
பார்வை : 106

மேலே