உன்னையே வேண்டுகிறேன்

மலர் தந்தாய் - அதற்குள் நல்ல
மணம் தந்தாய்! - துவண்டே
சடுதியாய் வாடவும் செய்தாய்!
சந்தமதை இழக்கவும் செய்தாய்!

உயிர் தந்தாய் - உளம் களிக்க
உரமும் தந்தாய்!
உடன் நோயும் தந்தாய்!
உறங்கிடும் இறப்பும் தந்தாய்!

இரு பால் படைப்பும் தந்தாய்!
இரண்டையும் சேரவும் செய்தாய்!
பிரிக்கவும் செய்தாய் - ஊடே
பிரிவுத் துயரும் தந்தாய்!

உணர்வைத் தந்தாய் - நல்ல
உயர் பண்பைத் தந்தாய் - ஊடே
உடன் சேரா பகைவனைப் படைத்தாய்!
உலகம் அழிக்கவும் செய்தாய்!

நல்லதும் செய்தாய்!
நன்றல்லாததும் செய்தாய்!
எதனால் இதனை
இப்படிச் செய்தாய்!

உன் செயல்கள் பலதை
உணரச் செய்வாய்!
உலகம் உவப்ப
கருணை பொழிவாய்!

உன் கோபம் எம்மை
விழாமல் காப்பாய்!
உலகம் செழிக்க - உன்
இரக்கம் சொரிவாய்!!

இறை வேண்டுதல்!!!
ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (17-May-14, 3:27 pm)
பார்வை : 185

மேலே