தாமரை மலர்ந்தது -கார்த்திக் ,நெல்லை

வீர்யமிக்க பேச்சினாலும்
சாதுர்ய செய்கையாலும்
இம்மாநிலம் தன்னில்
உனதாட்சியை அடைந்தாய்
அண்ணே

வெள்ளை மாளிகையில்
வீற்றிருக்கும் எலிகூட்டதிடம்
உசாராய் இருங்க அண்ணே
அது உலகையே சுரண்டும்
பெரிச்சாளிகள் அண்ணே
விருந்துண்ண அழைக்கும்
அன்பென்று சொல்லி தின்னும்
சோற்றினில் மெல்லசாகும்
விசந்தன்னை கலக்கும்
ஏமாற்றி ஏமாற்றியே உலகில்
பெரும்பான்மை வகிக்குது
அண்ணே கொஞ்ச உசாராய்
இருங்க அண்ணே

மதசார்பு மத சார்பு என்று
ஒதுக்கி விட நினைப்பர்
அண்ணே ;எந்த மதமாயினும்
மனிதனை மதித்தால் மட்டுமே
மதத்திற்கு பெருமை என்று
சொன்ன சுவாமி விவேகானந்தரை
நினைவில் கொண்ட அண்ணே
அவர் வழிதன்னில் இந்தியாவை
வளரவை அண்ணே

மதசார்பு என்று உன்னை தூற்றிய
மதுவிற்கும் கூட்டத்தை
மதியாலும் நினைக்காதே அண்ணே
கிடங்கினில் எலிதிங்க மூட்டை
மூட்டையாய் கோதுமையை
ஏழ்மை வயிறு எரிய அதனை
சாராய தொழிலுக்கு அள்ளி
கொடுத்த கூட்டமது அதனை
அடியோடு அடித்துவிடு அண்ணே

சிறுபான்மை பெரும்பான்மை
என்றினி வேண்டாம் எல்லாம்
சமமென்று அறியச்செய் அண்ணே
உலகில் ஜனசக்திகொண்டு
வளர்ச்சியுற்ற நாடென்று
இந்தியாவை போற்றவை அண்ணே

பதிமூன்று கூட்டம் இப்போது
ஆராயிரமாய் வளர்ந்து
உலகின் ஜனத்தொகையை
குறைக்க பார்க்குது அண்ணே
ஆருக்கும் தெரியாது ரகசியமாய்
நடக்குது ;அந்த ரகசியத்தை
நானறியவந்தேன் அண்ணே
அதனை நீயும் அறிவாய் அண்ணே
அவற்றை ஜப்பானிய நாடு
ஊதிதள்ளுவது போலே
நம் நாட்டையும் ஊதிதள்ள
செய் அண்ணே !!!

விவசாயமே நம் நாட்டின்
முதகெலும்பு அதனை சிறுக
சிறுக உடைத்தால் நம்நாட்டின்
கதியென்ன அண்ணே ;
விவசாயம் தளைக்க வழி சொல்லு
அண்ணே ;நம் நாட்டுக்கு செய்யும்
பெருங்கடமை அண்ணே அதனை
தயவுடன் மனதில் வைப்பாய் அண்ணே

நீ இந்தியாவை வளர்ச்சியடைய
செய்வாய் என்ற நம்பிக்கை
பலருக்கு இருக்கு அண்ணே
அவர்களின் கனவை நீ
நிறைவேற்று அண்ணே
உனது கம்பீர தோற்றத்தை
போலே உலகில் இந்தியாவை
வியக்க வை அண்ணே ;
உனது பக்கத்திலே நீ
வைத்து ஆராதிக்கும் சுவாமி
விவேகனந்தர் ஆசி உனக்குண்டு
அண்ணே -விரைவினில்
வல்லரசும் நமக்குதான்
அண்ணே

வாழ்க தமிழ்
வாழ்க பாரத மக்கள்
வாழ்க ஜனசக்தி
மென்மேலும் வளர்க
பாரத மணித் திருநாடு !!!


என்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (17-May-14, 5:15 pm)
பார்வை : 118

மேலே