நீயும் கடவுள்தான்
மனிதனாக பிறந்தவன் நீ
மாறிவிட்டால் கடவுளும் நீ
உள்ளத்திலே உயர்வுகொண்டால்
உலகிலேயே கடவுளும் நீ ........
கல்நெஞ்சம் மறந்துவிட்டு
கருணைகொண்டு மாறிவிடு
கலவுதனை துறந்துவிட்டு
காவலனாக மாறிவிடு ........
உள்ளத்திலே அன்புவைத்து
உறவுகளை நேசம்செய்யு
உண்மையான அன்பாலே
உலகத்திலே வாசம் செய்யு ......
எவர்மனமும் புண்படவே
என்றைக்கும் முயலாதே
இயன்றவரை அவர்மனத்தை
தேற்றிடத்தான் மறக்காதே ........
வார்த்தைகளில் இனிமையைத்தான்
சேர்த்திடதான் மறக்காதே
வார்த்தையாலே ஒருவரையும்
என்றைக்கும் பழிக்காதே ..........
நீதியோடு வாழ்வதையே
நியதியாய் கொள்வாயே
நிம்மதியை எவருக்கும்
கொடுத்திடத்தான் மறக்காதே .........
உதவிகளை செய்தவரை
உள்ளவரை நினைத்துபாரு
உலகில் உள்ள காலம்வரை
அவர்மனத்தை தேற்றிவாழு .....
பொய்மைகளை மறந்துவிட்டு
உண்மையோடு வாழ்ந்துபாரு
பொறாமைதனை களைஎடுத்து
பொன்முருவல் கொண்டு வாழு .......
இருதயத்தில் இரக்கத்தை
நிரப்பியே நீவாழு
இயன்றவரை என்றைக்கும்
உதவியே நீ வாழு ........
கொலைகுனத்தை கொன்றிட்டு
நீமாறும் நாள் என்று
புவிதனிலே கடவுளாக
நீயன்று அவதரிப்பாய் ........
மனிதனாக பிறப்பதுதான்
மாதவமோ என்றில்லை
மனிதனவன் கடவுளாக
மாறினாலே சாத்தியமே ......