தவமாய் தவமிருப்பேன்

சாய்ந்து நிற்கும் கதவோரம்,
நான் ஏங்கி ஏங்கி, தீவிரமாய் தீட்டிய
என் ஒற்றை விரல் ஓவியம் நீ!

உன் வார்த்தை செய்த வசியம் தானோ....??
நான் மயங்கி மயங்கி கிடக்க, இன்னும்
என் காதோரம் ஒலிக்கும் இசை நீ!

சேர்த்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய்
கோர்த்து கோர்த்து தினமும் அழகு பார்கிறேன்
முத்து முத்தாய், நீ சிதறி போன சிரிப்புகளை..!

மொட்டாய் போன
என் முகம் மலர ஏங்குகிறேன்,
தினம் உன் முகம் பார்க்கும் போதெல்லாம்!

நான் முகம் பார்க்கும் கண்ணாடியை
முத்தமிட்டு முறைக்கிறேன்.. அது
உன் கன்னத்தின் பிம்பத்தை காட்டுகிற போதெல்லாம்..!!

காற்றில் கலந்த உன் காதல் மட்டும்,
இன்னும் என் மூச்சுக் குழலில்
மூழ்கி கிடக்கிறது..!!

உன் கன்னம் வேண்டாம், இதழும் வேண்டாம்..
உன் நெற்றியின் மேல் எட்டி பார்க்கும் ஒற்றை முடி போதும்,
உனை கட்டி வைத்து, நான் காதல் செய்ய...!!

நான் தவமே செய்யாமல், எனக்கு
வரமாய் கிடைத்த காதல் நீ..!!
என்றும் தவமாய் தவமிருப்பேன்,
உன்னோடு வாழ்ந்திருக்க!!!!!

எழுதியவர் : சுதா ஆர் (17-May-14, 9:45 pm)
சேர்த்தது : சுதா ஆர்
பார்வை : 117

மேலே