காதல் இல்லை நடப்பு என்கிறாள்

உன் அகிம்சை என்னை கொள்ளும் முன்னே
கூர் வாழ் எடுத்து கொன்று விடு பெண்ணே
என் தனிமை என்னை கொள்ளும் முன்னே
நீ காதல் தந்து உயிர் வாழ விடு கண்ணே

மரணம் கொண்டப் பின் உடல் மண்ணில்
புதைய-என் உயிர் நீங்க வேண்டுமடி உன் மடியில்

எங்கு பார்த்த போதும் உந்தன் உருவம்
கண்டு கலந்கிபோனதடி எந்தன் உள்ளம்

இது உண்மை இல்லையே என்றால்
நான் உன்னுள் இல்லையே என்றால்
என்னை நானே வெறுக்கும் காலம்
மிக விரைந்து என்னை தேடும்
மனம் மதுவில் மயங்கி போகும்
இது என்ன பெண்ணின் சாபம்
ஏன் எனக்குள் வழிகள் ஐயோ
பெண் விழிகள் தந்த பொய்யோ


===============================================


என் பார்வை பொய்யும் இல்லை
அதன் அர்த்தம் காதலும் இல்லை
உன்னை வெறுக்க தோணவும் இல்லை
விட்டு விலக என்னவும் இல்லை

பார்வையாலே பிறக்கும் காதல்
பாதியிலே மறைந்து போகும் சாரல்
காதலை கடந்த நட்பை உன்னிடத்தில் நேசிக்குறேன்-காற்றை போல நட்பை
நான் உன்னிடத்தில் ஸ்வாசிக்குறேன்

தோழியாக என்னை ஏற்றுக்கொள்வாயா?


"காதலன் தோழனாக மாற முடியுமா
தோழிதான் காதலியாக மாற முடியுமா"

எழுதியவர் : kalaiselvi (18-May-14, 10:06 pm)
பார்வை : 112

மேலே