என் குருதியில் வண்ணம் தீட்டுகிறாய் நீ 555

உயிரானவளே...

நீதான் என்
சுவாசமென...

உன்னை சுற்றிய
என்னை...

நீ ஆயுதங்களின்றி
என்னை தாக்குகிறாய்...

என் கண்ணீரில்
ஓவியம் தீட்டுகிறாய்...

என் குருதியில்
உன் ஓவியத்திற்கு...

வண்ணம் தீட்டுகிறாய்...

என் நிறம் பிடிக்கவில்லை
என்று சொன்னவள்...

என் நிறம் கொண்டு...

உன் இமைகளுக்கு
மை தீட்டுகிறாய் ஏனடி...

பூக்களோடு காதல் கொள்ளாத
தென்றல் இல்லை...

மண்ணோடு காதல் கொள்ளாத
மழைத்துளி இல்லை...

நான் விண்ணைதொட
என்னோடு நீ இல்லை...

உன் நினைவிலே நான்
மண்ணை தொடுவேன்...

நாளை...

என் பிரியமானவளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-May-14, 9:04 pm)
பார்வை : 194

மேலே