எப்படித்தான் மறப்பேனோ

பனி படர்ந்த மலையூரில்
மேனி நனையாத பூமகளே
அழகான சின்னவளே
அழுக்காய் இருப்பவளே
எப்பவோ பார்த்திருந்தும்
எப்பொழுதும் உன் நினைவு
எப்படித்தான் மறப்பேனோ!

விடியலுக்கு முன்னெழுந்து
வழிகாட்ட வந்தவளே
கூலிக்கு சுமை தூக்கிக்
காடு மலையெல்லாம்
கால்கடுக்க நடந்தவளே
உன் சுமையை இறக்கிவைக்க—நீ
பட்ட துயர் சொல்லலையே!

ஒத்தையடிப் பாதையிலே
உன்னோடு நான் நடக்க
மண்ணோடு மழைசேர
சேராகி உருமாற
சறுக்கி நான் கீழேவிழ
மரத்தோட வேர் பிடித்து
மரணத்தோடு போராட,

உன் உயிரை துச்சமென
போராடி எனைக்காத்து
உயிர் தந்த உமையவளே
உன்னை வணங்காமலிருப்பேனோ!
ஒவ்வொரு விடியலிலும்
உன்னை நினைக்காமல்
என் உயிர் வாழ்ந்திடுமோ!

எழுதியவர் : கோ.கணபதி (21-May-14, 11:50 am)
பார்வை : 77

மேலே