தாய் தந்தை அன்பு
பிள்ளை பருவத்திலே உங்கள் பாச அரவணைப்பிலே
உள்ளம் மகிழ்ச்சியால் திளைத்தனவே!
நான் செய்த நல்லவைகளை வாய் விட்டு பாராட்டாமல் தவறுகளையும் தட்டி கேட்காமல் வாயை இறுக கட்டி போட்டவர்களே!
படி என்று ஒரு நாளும் சொல்லாமல் படிப்பின் அருமைகளை தெளிவு படுத்தாமல் தன் வேலை உண்டு தான் உண்டு என்று தங்களுடைய வேலைகளை மட்டுமே பார்த்தவர்களே!
சரி! அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று நான் பாட்டுக்கு என்னுடைய அறிவுக்கு எட்டியவரை நான் உணர்ந்து செயல்பட்டு இயன்றவரை படித்து சுமாரான வாழ்க்கை வாழ எத்தனித்த போது அவர்களுடைய ஏளன வார்த்தைகள் என் மனதை தைத்தனவே!
எனக்கென்று ஒருத்தி வந்தவுடன் உங்களுடைய இருவர்களின் மனதில் செயலில் எண்ணங்களில் மாற்றங்களோ ஓராயிரம்!
மனைவி என்று வந்தவுடன் அவளும் ஒரு பெண் என்று எண்ணாமல் அவளுடைய குறைகளை மட்டுமே பேசி அவளுடைய வீட்டின் ஏழ்மையை இகழ்ந்து பேசி வார்த்தைகளால் சாகடித்தவர்களே!
ஒரு கண்ணில் வெண்ணையையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பினை வைத்தார் போல் என் இளையோனை மட்டும் மதித்து நடப்பது ஏனென்று எண்ணி பார்த்ததில் அவனுக்கு வாய்த்தவள் செல்வ செழிப்பான வீட்டினில் இருந்து வந்தவள் என்பதினாலோ!
நான்கறிவு படைத்த விலங்கினம் தான் தன் குட்டிகள் வளர்ந்தவுடன் பிரிந்து சென்று விடும். அதைத்தான் நீங்களும் செய்தீர்கள்! குரங்கிலிருந்து மனிதன் வந்தவர்கள் என்பதினாலோ!
வெறும் பணத்தினை மட்டுமே மதிப்பவர்களை நம்பி என் வாழ்கையை தொலைத்து என் மனைவி குழந்தைகள் அனாதையாய் இருப்பதாய் எண்ணி என் நெஞ்சினில் முள்ளாய் தைத்தனவே!
இப்படி என் மனதினில் ஆயிரம் குழப்பங்கள் வேதனைகள் இதனை தீர்ப்பார் யாரோ!