நிச்சயம் இது தியாகம்தான்
கணவன் என்கிற
உறவின் அபகரிப்பால்
முதலிடத்தில் இருந்த நான்
கடைசி இடத்திற்கு போய்விட்டேன் ........
பெயருக்கு முதலில் வரும்
முதல் எழுத்திற்கு கூட
அருகதை அற்றவனாகி விட்டேன் ........
பெற்று வளர்த்து
ஆசையாய் தோலில் சுமந்த உறவை
காலில் போட்டு மிதித்து விட்டது
கல்யாண உறவு ..........
கண்கண்ட இடத்தில் கணவன்
காலத்திற்கு சேவை வாங்க மாமியார் மாமனார்
தோழியாக நாத்தனார் தோழனாக கொழுந்தனார்
என நீண்டுகொண்டிருக்கிறது அவள் உறவு ..........
பெற்ற வளர்த்த மகளை
பிரிந்து வாழமுடியாத உறவை
கட்டியவன் கைக்குளாகிவிட்டால்
நானோ அனாதையாய் ..........
ஆண்டுகள் பல வளர்த்ததற்கு
ஆசிர்வாதிக்க மட்டுமே அனுமதி
அவள் காலை தொட்டதும்
கண்ணீரே காளை கழுவிக்கொண்டது ........
கடல்கடந்தபோதும் கடித தொடர்போடும்
தொலைப்பேசி அழைப்போடும் மட்டும்
இளைப்பாறுகிறது எந்தன் நெஞ்சம்
மற்ற நேரங்களில் விரக்தியும் வெறுப்பும் ........
தோளுக்கு தோலாய்
நட்புக்கு நட்பாய் இருந்த
மகளின் நினைவு உணவருந்தும் வேளையில்
ஊட்டியை பிடிக்கிறது ........
கைபிடித்து நடந்தவளை
கரம்பிடித்தவன் கைப்பற்றிக்கொண்டான்
உறவு முறையின் சட்டத்தில்
வெறும் பயலாக பெற்றவன் .........
சீர் பட்டியலில்
இடம்பெறாமலேயே இருதயமும்
அவளுடனே போய்விட்டதுபோலும்
வெறும் உடல் மட்டும் இங்கே .......
அவளுக்காய் வாழ்ந்து
அவளுக்காய் உழைத்து
அவளுக்காய் செய்து
இன்று அவளில்லாமல் அனாதையாய் ......
நிச்சயம் இது தியாகம்தான் ........