பால்வீதியில் தொலைந்தவர்கள்

உன்னுடனான
ஒவ்வொரு இரவும்
பால்வீதியில்
விடிகிறது....

கதவுகளற்ற
பிரபஞ்சத்தில்
கடுங்குளிர் போக்க
உன் கண்கள் போதும்....

வெள்ளை ஆப்பிள்
மரத்தடியில்
வேகம் பற்றிய
விவாதத்தில்
காலங்கள் தொலைகிறது
நம் தழுவல்கள் பிரிவதில்லை.....

தூரம் எதுவென்ற
அர்த்தம் மறதியாகிறது...
பக்கம் எதுவென்ற
பார்வை உன் பிரதியாகிறது.....

கடவுளற்ற தேகத்தில்
ஒளிச் சிதறல்களும்
உடைந்த நிலாக்களும்,
விண் வெளியும்
வேகம் என்ற ஒரு துளியும்.....

பசி அற்ற
பருவம் அற்ற
சுழற்சியில்
எல்லாம் ஒன்றாகிப் போகும்
ஒரு புள்ளியில்
நாம்--- இருவர் அல்ல....

பழக்கம் விடவில்லை....
வந்து போன எரிகல்லில்
நம் பெயரை
எழுதி விட்டேன்.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (21-May-14, 2:34 pm)
பார்வை : 412

மேலே