தலைக்கு நூறு

தலைவா ஊரு பூரா “தலைக்கு நூறு, த்லைக்கு நூறு”ன்னு ஒரே வதந்தியா இருக்கு.

அது வதந்தி இல்லய்யா. உணமைதான். நம்ம கட்சி எலக்‌ஷன்ல நின்ன எடத்திலெல்லாம் டெபாசிட் போச்சு இல்லையா?

ஆமாய்யா மன்சுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்குதுங்கய்யா.

அதனால அந்த கட்சியைக் கலச்சிட்டு புதுசா ஒரு கட்சி தொடங்கப் போறேன். வ்ந்து சேர்ற ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு கைத்தறித் துண்டப் போத்திவிட்டுட்டு அன்பளிப்பா நூறு ருபா தரப்போறேன்.

அய்யா மொத ஆளா நான் சேர்றேன். என்ன கவனிங்க அய்யா.

உன்ன மாதிரி பழைய ஆளுங்கெல்லாம் ஆளுக்கு நூறு பேர கட்சிலெ சேத்தா தலைக்குப் பத்தாயிரம் ரூபா அன்பளிப்பா தர்றன்யா. போதுமா?

போதுங்கய்யா. அடுத்த சட்டமன்றத் தேர்தல நாமதய்யா ஜெயிச்சு ஆட்சியப் பிடிக்கப் போறோம்.






(இது போன்ற அன்பளிப்பும் தண்டனைக்குரிய குற்றம்)

எழுதியவர் : மலர் (21-May-14, 4:39 pm)
பார்வை : 263

சிறந்த நகைச்சுவைகள்

மேலே