வெட்டுக்கிளி 4

வீட்டிற்க்கு வந்ததும் முதலில் வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு ஓடினேன்.
வெட்டுக்கிளி அங்கேயே இருந்தது.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக,அச்சிர்ரியமாக இருந்தது.
வெட்டுக்கிளிக்கு அருகில் சென்று அமர்ந்தேன்,
நீ இங்கேதான் இருக்கிறாயா,நீ போய் இருப்பாய் என்று நினைத்தேன் என்று கூறினேன்.
வெட்டுக்கிளியிடம் எந்த ஒரு அசைவுமில்லை.
நான் கூறியதர்காகவா இங்கேயே இருந்தாய் என்று கேட்டேன்.
வெட்டுக்கிளி அதன் தலையை நிமிர்த்தி என்னை பார்த்தது.

வேகமாக ஓடி சென்று.
பாபு பாபு என்று என் அண்ணனை அழைத்தேன்.
என்ன என்று அண்ணன் கேட்டான்.
சொல்கிறேன் வா என்று என் அண்ணனை வெட்டுக்கிளி இருந்த இடத்திற்கு அழைத்து சென்றேன்.
வெட்டுக்கிளியை காட்டி பாபு நான் இந்த வெட்டுக்கிளியிடம் பள்ளிக்கு சென்று வந்துவிடுகிறேன் இங்கேயே இரு என்று கூறிவிட்டு
சென்றேன், பார் அது இங்கேயே இருக்கிறது என்று கூறினேன்.

உனக்கு என்ன பைத்தியமா,அது என்னவென்று உனக்கு தெரியுமா?,அது ஒரு விஷ பூச்சு,அது கடித்தால் இறந்துவிடுவார் என்று அண்ணன் கூறினான்.
எனக்கு அவன் கூறியதை கேட்டு பயம் வந்தது.

என் அண்ணன் அருகே இருந்த தொடப்பத்தையும்,மொரத்தையும் கையில் எடுத்து வெட்டுக்கிளியை தொடப்பத்தால் மொரத்தில் தள்ள முயன்றான்.
வெட்டுக்கிளி தரையை இருக்கமாக பிடித்து கொண்டிருந்தது.
எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதன் உயிருக்கு ஆபத்து வரும்போது தப்பிக்க முயலும்,ஆனால் அது அப்போது பறந்தோ,தாவி குதித்து தப்பிக்கவோ முயலவில்லை.
அது ஏன் தப்பிக்க முயலவில்லை என்று எனக்கும் புரியவில்லை.
நான் பயத்திலும்,குழப்பத்திலும் இருந்தேன் என் அண்ணனை தடுக்க வேண்டும் என்று எனக்கு தோணவில்லை.
அண்ணன் தொடப்பத்தால் வெட்டுக்கிளியை அடித்து மொரத்தில் எடுத்து கீழே போட்டான்.
வெட்டுக்கிளி கீழே விழுந்தது.

பூச்சிகிட்டலா நின்னு பேசிட்டு இருக்க வா போல என்று அழைத்துவிட்டு அண்ணன் அக்கிருந்து சென்றுவிட்டான்.
கீழே விழுந்த வெட்டுக்கிளியை பார்த்தேன்.
வெட்டுக்கிளி விழுந்த இடத்திற்கு ஓடினேன்.
வெட்டுக்கிளிக்கு அருகே சென்றதும் முட்டிக்காலிட்டு அமர்ந்து என் தலையை அருகே கொண்டுசென்று வெட்டுக்கிளியை உற்றுபார்த்தேன்,வெட்டுக்கிளி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது
அதன் ஒரு கால் உடைந்திருந்தது அதனால் சரியாக நிர்க்க முடியாமல் தடுமாரி கொண்டிருத்தது.
வெட்டுக்கிளியின் நிலைமையை கண்டு வருத்தமாக இருந்தது,அதனுடைய இந்த நிலைமைக்கு நாமும் ஒரு காரணமோ என்ற குற்ற உணர்வு இருந்தது.
என் இதயத்தில் ஓர் வலி ஏற்பட்டது,அந்த வலியின் காரணமாக என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.

அழுதுகொண்டிருந்தேன்

அப்போது வெட்டுக்கிளி தாவி குதித்து என் கன்னத்தின் மீது அமர்ந்தது.
என் கண்களில் இருந்து வந்த கண்ணிருடன் சேர்ந்து
வெட்டுக்கிளி வழுக்கி கீழே விழ்ந்தது..

அதன் பிறகு அதன் உடலில் சிறு அசைவுமில்லை,
வெட்டுக்கிளி இறந்துவிட்டது.

வெட்டுக்கிளியை எடுத்து சென்று எதிரே தென்பட்ட எங்கள் வீட்டு தோட்டத்தில் வைத்துவிட்டு,
வெட்டுக்கிளியை புதைக்க சிறு குச்சியால் பள்ளம் பறித்தேன்.
அப்போது வெட்டுக்கிளியை உண்ண காகம் ஒன்று பறந்து வந்து அமர்ந்தது.

வெட்டுக்கிளியை புதைப்பதால் மட்டும் என்ன ஆகிவிட போகிறது.
வெட்டுக்கிளியின் உயிர் பிரிந்துவிட்டது.அதன் உடலை காகத்திற்கு உண்ண கொடுத்தால் அதன் பசியாவது தீரும் என்று நினைத்து வெட்டுக்கிளியை காகத்திடம் கொடுத்துவிட்டேன்.

இந்த கதையை அந்த வெட்டுக்கிளிக்காக சமர்பிக்கிறேன்.

கதை முடிந்தது..
நன்றி .
.

எழுதியவர் : அணுரஞ்சனி (21-May-14, 5:55 pm)
பார்வை : 459

மேலே