சிறை கொள்

கற்களில் தோன்றும் பிம்பமே!
தண்ணீரில் தெரியும் உயிரற்ற உயிரோவியமே!

விரல்கள் தேடும்போது காற்றாய் தழுவும் உயிரே!
நினைவுகளை ஊடுருவல் செய்யும் தீவிரவாதியே!

கண்களினால் சிறை பிடிக்கலாம் என்று நினைத்தேன்!
சொற்களால் மயக்கி தப்பிவிட்டாய்.

ஆனாலும்,

நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் உன் நினைவை எப்படி???

சொற்களால் தப்பிவிட்டாலும், கடிவாளம் போட்டுவிட்டேன், என்னுயிராக!

சிறை கொண்டு சென்று விடு எதுவாகவும்!

அல்ல உயிராக! நீ இல்லாது உயிரற்றுவிடுவேன்!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (21-May-14, 9:41 pm)
சேர்த்தது : எண்ணத்திரவங்கள்
Tanglish : sirai kol
பார்வை : 88

மேலே