மரியாதை

மாறுவேடப் போட்டியில்...
பாரதி வேடம் பூண்டுவிட்டு
மீசைமுறுக்க மறுத்தது..
என் தப்புத்தான்..!

நான் என்ன செய்ய..?

முன்வரிசை இருக்கையில்
கைகட்டி.... மீசைமறைத்து...
அடக்கமாய் அல்லவா
அமர்ந்திருந்தார்...
என் அப்பா!

- இராசகோபால் சுப்புலட்சுமி

எழுதியவர் : இராசகோபால் சுப்புலட்சுமி (22-May-14, 12:28 pm)
Tanglish : mariyaathai
பார்வை : 276

மேலே