ரசிக்க ரசிக்க தீராதது
இனிய இன்னிசை மெல்லிய பாடல்
இதமான இனிய இளந்தென்றல் !!
இன்ப ராகங்கள்
இதயத்தை தொடும் வரிகள்
சற்றே மலர்ந்திருந்த மல்லிகையின்
மனம் கவர்ந்த வாசனை!!!
வெள்ளித்தட்டு இல்லை இல்லை- அது
வெள்ளி வண்ண வெண்ணிலவு
நிசப்த்தமான வானிலை
நித்தம் இவையாவும் ரசிக்க -மொட்டைமாடியில்
ஒரு பெளர்ணமி போதாது
ஒரு கோடி பெளர்ணமி கிடைத்தாலும் தீராதது.....