மலர்கள் பேசினால்

மணத்தையும் கொடுக்கின்றோம்..
மனதினையும் அர்பனிக்கிறோம்..
பெண்களின் கூந்தலுக்குப்
பெருமையும் சேர்க்கிறோம் ...
இறைவன் தலையிலும் சூடப்படுகிறோம்
திருப்பாதங்களிலும் சரணடைகிறோம்
அழகுக்கு அழகு சேர்க்க
ஆண்டவனின் சந்நிதானத்தையும்
அலங்கரிக்கிறோம்...
இணைகின்ற இன்ப உள்ளங்களுக்கும்
மண்ணில் மடிகின்ற உடலுக்கும்
மாசற்ற நறுமணத்தைக் கொடுக்கிறோம் ...
மலர்கின்ற மலர்கள்
மதியம் உறவாடுகின்ற வேளை..
அசைகின்ற அதிர்வை ..
அறியாத உள்ளங்கள் .
பேசுகின்ற பேச்சு
என்ன காற்று இது ?
வேகமான காற்று...
மலரும் நினைவுகள்
மனிதர்கட்கு மட்டுமா?
நமக்கும் இருந்தால் என்ன ?
இல்லத்தின் மூலையில்
காலணிகள் கூட
கணக்கற்ற கதை பேசுகின்றன....
நாமோ வாடியதும்
வராண்டாவில் தூக்கி ஏறியப்படுகிறோம்!
இந்நிலை மாறினால் என்ன?
இறைவனுக்கேன் இந்த ஓரவஞ்சணை..?
நம் வயது வரம்பை
சற்று உயர்த்தினாலென்ன?
இறைவனுக்கு கனிவுண்டு கருணையும் உண்டு ..!
நாம் பேசுவது அவர் காதில் விழுந்திருக்கும்
நல்ல தீர்ப்பு வழங்குவார் என்ற
நம்பிக்கையுடன் விடைபெறுவோமாக !!!!!!!!