காதலின் காந்தத்தன்மை
கதைகளில் படித்ததில்லை
கற்பனைகளில் மிதக்கவில்லை
ஆயினும் நான் அதிர்ஷ்டசாலி
ஆயிரம் விளக்குகளால் கூட
ஒளிர்விக்க முடியாத
என் வாழ்க்கையை
அரைநொடியில் ஒளிர்வித்தாள்
அது போதும்
அன்று அவள் தந்த பார்வை
இன்றும் என் கண்முன்னால்
நிழலாடிக் கொண்டிருக்கிறது...!