அப்பா - முதல் காதலன்

என் உறக்கம் கலையாதிருக்க
தங்கள் உறக்கம் தவிர்த்து
தளிர்மேனி தட்டி கொடுத்து
தலையனை ஆன நாட்களையும்.....

விழுந்திட கூடுமோ என்று
ஐயம் கொண்ட நெஞ்சோடு
என் சுட்டுவிரல் பிடித்து
நடை பயிற்றுவித்த நாட்களையும்...

கண்ட கனவுகளை வெளியிடாமல்
மனதோடு சுமந்து நிற்கையில்
அவற்றை நினைவுகளாக்கி என்மனதை
மலரச் செய்த நாட்களையும்....

நினைவு பெட்டகத்தில்
பத்திரப்படுத்தி எடுத்து செல்கிறேன்
தகப்பன் வீட்டு சீதனமாய்
என்னை கொன்டவன் வீட்டிற்கு....

தாங்கள் தான் என்மனம்
கவர்ந்த முதல் ஆடவன்
என்பதை பறை சாற்றும்
என் கண்ணீரின் துணைகொன்டு......

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (23-May-14, 6:54 pm)
பார்வை : 381

மேலே