என் தோழி

எல்லா நண்பர்களும் உடன் இருந்தார்கள் விண்மீன்கள் போல ......
நான் தேடும் என் நிலவே
நீ எப்போது வருவாய் .............
காயங்கள் பல நான் கொண்ட போது
காற்றாய் வந்து ஆற்றினாய்.....
கண்ணீரில் நான் மிதந்த போது
கப்பலாய் வந்து கரை ஏற்றினாய்.....
காலம் என்னை கட்டாயப்படுத்தி
கணப்பொழுதில் நம்மை பிரித்தது.....
காணமல் போனாலும் நம் நட்பு
கலங்கி போகவில்லயடி....
உனக்காய் ஜெபிக்கும் ஒரு ஜோடி உதடுகள்...
உனக்காய் நடக்கும் ஒரு ஜோடி கால்கள்....
உன்னை நோக்கி வரும் இணை கைகள்....
உன் குரல் கேட்க....
உன் முகம் பார்க்க....
நாட்கள் வேண்டுமானால்
நகர்ந்து போகலாம்....
நாழிகை வேண்டுமானால்
நழுவிப் போகலாம்....
நான் விரும்பும் சகியே
நொடிப்பொழுதில் வருவேன்- உன்
நினைவுகளை சுமந்தபடி....
சின்ன சின்ன தொட்டியில் நாம் வளர்த்த
சிங்கார மீன்களெல்லாம்
சிணுங்கியபடியே காத்திருக்கட்டும் நம்
சிறுவயது சிந்தனைகளூடே....
சிறகடித்து பறப்போம்...
கண்மூடி நான் உறங்கினாலும்
கணமும் உறங்காது காத்திருக்கும்
என் மனம்
கனவிலும் நீ வருவாயென.....
அன்றும் இன்றும் என்றும்
இமைகள் தொடும் ஒவ்வொரு நொடியும்
இதயத்திற்குள் இனித்திருப்பாய்
என் இனிய நட்பே .....