அமுதம் நஞ்சானது

உன்னை
என்னில் செருகினான்
ஆனாலும்
எனக்கு இரையல்ல...
நீ!

என் உடலில்
நீ
ஏறும் போது
வளைந்து நெளிந்துதான்
ஏறிக்கொண்டாய்
அதையும் உணர்ந்தேன்

என்று
துாண்டில் முள்
புழுவோடு
பேசிக்கொண்டிருக்கையில்...
எச்சிலைத்துப்பி
எறிந்தேன் குளத்தில்!

உணவுத்துண்டை
கண்டதும்
இரை கொண்டது மீன்!
மனிதனின்
இரை என்பது தெரியாமலும்
மனிதனுக்கே
இரையாவது புரியாமலும்

எழுதியவர் : மிஹிந்தலைA.பாரிஸ் (24-May-14, 12:08 pm)
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே