எங்கே சென்றன

பசுமை நிற
போர்வை போர்த்தியது போல்
தென்பட்டன
ஏரியோர கரைகள் ....
தத்தி தாவும் தவளை இனங்களும்...
மண்ணில் வளைந்தோடும்
மண்புழுக்களும் ....
சின்ன சிறகை விரித்து
பளிங்கு கண்கள் திறந்து
மேலே பறந்து வரும்
சிட்டுக்குருவி இனங்கள்....
அதை பார்த்து விட்டு
தனக்கு ஆபத்து வந்ததென
வலைக்குள் ஓடி ஒளிகின்ற
நண்டு இனங்கள்....
இவற்றைஎல்லாம்
வரைபடத்தில்
பார்த்து விட்டு ஆசிரியரிடம் கேட்கிறான் மாணவன் ........
இவையெல்லாம்
வேற்று கிரக உயிரினங்கலாஎன்று ....!!!!!