மனிதம் எரிகிறது

பணம்!பணம்!பணம்!
துரத்திச்செல்லும் வாழ்க்கை
முகம் பார்க்க நேரம் இல்லை
இனி மனம் பார்க்கவா நேரம்?
அன்பு என்றாலே காதல்
வேறு அர்த்தம் தெரியா
சில தலைமுறை தளிர்கள்.. ..
வேறு பாலின தோழமைக்கே
தவறான பார்வைகள் இருக்க -
புதிய முகங்களுக்கான மனிதத்தை
வரவேற்ப்பது எவ்வாறு????????
மரணம் கூட பாதிக்காவண்ணம்
மனங்கள் மரத்து விட்டதே-
ஏமாற்றி பிழைப்பது-புத்திசாலிதனம்
அறியாமையை பயன்படுத்திகொள்வது -ஜனநாயகம்
சமுதாயம் கற்ப்பிப்பவை
சுயநலம் ...சுயநலவாதிகள் .....
கல்லூரிகளின் தயாரிப்புகள்
வாழ்க்கையை கற்பிக்க
மறந்த - கல்விச்சாலைகள்
இச்சுழலில் மனிதத்தை
எதிர்பார்ப்பது- முட்டாள்தனம்
மனதில் குமுரவே முடிகிறது
முடியவில்லை- எதிர்த்து கேட்க்க
மனிதம்!
மனிதம்!
சதையற்ற எலும்பாய்....
எரிகிறது !
மனிதம் எரிகிறது !!!!!????
---suri nagu