கண்ணில் மை எழுதாமல்

கண்ணில் மை எழுதாமல்
இதழில் வண்ணம் பூசாமல்
கழுத்தில் பொன்னகை
எதுவும் அணியாமல்....

கூந்தலில் வாசமிகு
பூக்களை சூடாமல்
கரங்கள் வளைகள் காணாமல்
பாதங்கள் கொலுசு சத்தம் அறியாமல்
இத்தனை இல்லை உன்னுள்...

ஆனால்
உன் நிறைந்த பண்பினால்
எல்லா அழகுமே உன்னுள்.....

எழுதியவர் : சாந்தி (25-May-14, 10:24 pm)
பார்வை : 1455

மேலே