நேற்றைய மழையின் தூரல்--சும்மா ஒரு வர்ணனை

வானம் தனது ஒளி ஜூவாலையினை விழுங்கி
கருநீலம் கலந்த இரவினை
மெல்ல நிரப்பிக்கொண்டிருந்தது.
அலுவலகம் விடுத்து
வெளியே நடந்து வருகையில்
மழை இசையில்,
இலை தழுவி மரம் நனைந்திருந்தது.
மண்ஈரமாகிய வாசனையும்,
துளிச்சாரல் காற்றுடன்
தூரத்து நினைவுகளினை
தென்றலாய் தீண்டித் துளைத்தது.

நத்தையின்
நீட்சிநூல் உணர்வில்
நகர்வதுபோல
சற்று தூரம் வந்தததும்
சாலையில்
மின்விளக்கின் மஞ்சள்,
மழை தெறித்ததனால்
வீதிவெளியெங்கும் கொட்டிக்கிடந்தது.
நிலாவின் ஒளிவளையங்களை
சிறிது தாமதித்து
மேகங்களினை கலைத்தபின்தான்
நிறுவ வேண்டியிருந்தது.

கொன்றைப்பூக்களினால்
நிறைந்திருந்த
மரம் முழுதும்
நாளைய பூக்களின் மொட்டுகள்
வெட்கத்தில் குளிர்ந்திருந்தது.
சரியாக
என்நேர் திரும்பி
இணைபிரிந்து
பின்வழியில் செல்லும்
தோழிக்கு
கையசைத்து
விடைகொடுத்துவிட்டு
குடை பிடித்து
ஒரு மழை
நடந்து சென்றது
எனை கடந்து.....

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (26-May-14, 10:59 am)
பார்வை : 102

மேலே