எதிர்பார்ப்பு
மனமெல்லாம் வேதனைகள்...
மௌனமான சோதனைகள்...
அலையலையாய் போதனைகள்...
இருந்தும்-
மலைபோல சாதனைகள்!
*
கனவுகள் கலைந்து போயின...
கண்ணிமைகள் கனத்துப் போயின...
ஏக்கங்கள் அடங்கிப் போயின...
அங்கங்கள் இளைத்துப் போயின!
*
காத்திருப்பில் ஏக்கங்கள்...
கண்விழித்தும் தூக்கங்கள்...
காதலித்தால் துக்கங்கள்...
கவிதையிலே சில சிக்கல்கள்!
*
எதிர்பார்ப்பும் பரிதவிப்பும்
ஏக்கத்தின் கூறுகள்...
தாமரை மலர்ந்த பின்னும்
தண்டின் கீழ் சேறுகள்!
18.02.1995