நனவுகள்

ஒரே ஒருமுறை வந்துசென்றாலும்
விழிகளை பம்பரமாக்கி
குட்டிப்போட்ட பூனையாய்
அவனையே சுற்றும்படி
ஆளுமை செய்துவிடுகிறானே
பல்லிடுக்கின் ஓரம்
பருக்கையை துழாவியபடி
யாரிவன் என்ற நனவுகளினூடே
இதுவரையிலும்
யாருமேவேண்டாம் என்ற அவள்
அனுசரன்