நம்பிக்கையை நம்பு

திறக்காத பூக்களுக்குள்ளே
சுரக்காத தேனை நம்பி
பிறக்காத தும்பிகள் உண்டா?

பிறக்காத மேகத்துக்குள்ளே
இருக்காத நீரை நம்பி
புதையாத விதையும் உண்டா?

இல்லாத கதவில்
இருக்குது ஒரு வழி என
இருத்து உன் விழியில்
இப்படியே
நகர்த்து உன் வழியை

சொல்லாத சொல்லுக்குள்
செல்லும் வாய்ப்பு
இருக்குதென இருந்துவிடு
இறப்பதை இறக்க விடு
இருப்பதற்கு உயிர் கொடு

நீ பார்க்காத இடத்தில்
பார்வை ஆயிரம் இருக்கு
உன் பார்வை பார்த்தே
உனக்கென ஓர் இடம் இருக்கு
பதறாமல் அதை பார்..!

நீ தட்டியவைகள்
உன்னை தள்ளியதா
நீ தள்ள வேண்டியதை
தட்டியிருக்கிறாய்
கட்டி வைக்காதே உன்னை
எட்டிப் பார்த்துக் கொண்டே இரு
எட்டும் எதுவும்

தட்டும் வரை வாய்ப்பு
எட்டியதும் வெற்றி
எட்டாதது பயிற்சி
எட்டுவதற்கு முயற்ச்சி
இது தான் முதிர்ச்சி.

குப்பைகளை குப்பையாக்கவும்
வெற்றிகளை வெற்றியாக்கவும்
மறந்ததின் விளைவு
உணர்ந்ததும் உறங்கிக்கொண்டிருக்கிறது
உறங்க வேண்டியது
அரங்கம் ஏறி இருக்கிறது
உன் அரங்கத்தை
அழ வைத்துக் கொண்டிருக்கிறது...

அழுகைக்கு
உன் தொழுகை போதும்
அழுக்கை சுமந்த
கழுதையானதும் போதும்
கழுகாகு
கவர்ந்து இழு..!

நம்பிக்கைக்கு
நம் கை தான் தேவை
ஒரு கை தந்து பார்
எது உன் கையில்
இல்லை பார்?

நம்பிக்கையை நம்பு
அது தான்
இந்த வாழ்க்கைக்கு தெம்பு..!

எழுதியவர் : Raymond (27-May-14, 4:40 am)
பார்வை : 198

சிறந்த கவிதைகள்

மேலே