தமிழனின் தலை சிறந்த உணவு
தமிழனின்
தலை
சிறந்த
உணவு என்ற
பெருமை
ஒரு பக்கம்
ஒய்யாரமாய்
எங்களுக்கு
ஏற்றம் அளித்தாலும்
எங்களையும்
வர்த்தகமாகி
சந்தையில்
விலை பேசுகின்றீர்களே ??
இரண்டு இட்லி 30 ருபாய்
ஒரு கரண்டி பொங்கல் 40 ருபாய்
ஒரு வடை 20 ருபாய்
சட்னி
மிளகாய் பொடி
சாம்பார்
இலவசம் என்ற பெயரில்
கண்ணில் தெரிவதற்காக
வைத்து விட்டு
கண் துடைப்பு
ஒரு தட்டு டிபன்
90 ருபாய்
10 ருபாய் கொண்டு வைப்பவருக்கு
100 ருபாய் இல்லாமல்
தமிழன் இன்று
காலை உணவை
உண்ண முடியாது .....
உணவகங்களில்
வர்த்தகம்
மனித உள்ளகளில்
வருத்தகம்=============
நிலை மாறுமா ???
சீறுமா???
சிந்திக்க வைத்து
பசி எடுக்க வைத்து விடும் .

