கொழுப்பு அவளுக்குMano Red

என் கவிதைகள் தின்று
கொழுத்துப் போனவள் அவள்,
கொஞ்சம் விட்ட
இடைவெளியில்
கவிதைகள் புளிக்கிறது
பிடிக்கவில்லையென்றால்
சும்மா விடமாட்டேன் அவளை..!!
அவள் செய்த
இம்சைகள் பொறுத்து
அஹிம்சை காத்தது
அந்தக் காலம்..!!
தீவிர பாசம் காட்ட
தீவிரவாதி ஆகி என்ன பயன்..?
என்னைப் பார்த்தால்
எப்படி தெரிகிறதோ அவளுக்கு.?
நிச்சயமாக
லூசு என்று தான்
நினைத்திருப்பாள்..!!
பரவாயில்லை
அப்படியாவது நினைக்கட்டும்..!!
அவளின் முகவரி கேட்டதில்லை
இருந்தும் பயப்படுகிறாள்,
அவளின் புகைப்படம் கேட்டதில்லை
இருந்தும் பகைக்கிறாள்..!!
என் நடத்தைகளை சோதனை செய்தே
வேதனை தருகிறாள்..!
அவள் என் பொறுமையை
உரிமை கொண்டாடுகிறாள்,
எதிர்பார்ப்புகளை
எட்டி மிதிக்கிறாள்,
காத்திருக்கச் செய்தே
காலம் கடத்துகிறாள்..!!
என்னை நல்லவன் என
நிரூபிக்க
உருவமா மாற முடியும்...??
உதறிச் செல்லும் அவளுக்கு
உருவம் கிருவம் எல்லாம்
உப்பு சப்பில்லாத ஒன்று..!!
என்னைப் பற்றி புரியாத அவளுக்கு
என்ன சொல்லி
என்னை புரிய வைப்பது,
எல்லாமே பொய்யான பின்பு
எதுவும் உண்மையாகி விடாது.!
ஒன்று நிச்சயம்
அவள் இல்லாமல் போனால்
தாடியுடன்
தண்ணி அடித்துக் கொண்டு,
நாயுடன் ஊர் சுற்ற
நான் ஒன்றும்
தேவதாஸ் அல்ல..!!
(பின்குறிப்பு: அவள் யாரோ..?)