காதல் இங்கே, காதலன் எங்கே

காதல் இங்கே....
காதலன் எங்கே.... ?

உன் முகம் பார்த்து வந்த சிரிப்பு...
உன் கண் பார்த்து பேசிய வார்த்தை...

உன் கை கோர்த்து கடந்த பாதை....
உன் வருகை எதிர் பார்த்த என் பார்வை...

உன் தோள் சாய்ந்து உணர்ந்த என் சொர்க்கம்...
உன் புன்னகை உணர்த்திய என் வெட்கம்....

உன் கேள்விக்கு நான் காட்டிய மௌனம்...
உன் பதிலுக்கு நான் தந்த சம்மதம்....

உன் காதல் உணர்த்திய என் பெண்மை...

அத்தனையும் என்னோடு இருக்க....
நீ மட்டும் இல்லையடா....
என்னருகில்.....!!!

இதற்க்கு பெயர் தான் காதல் என்று
சொல்வார்களோ ......!!!

எழுதியவர் : கண்மணி சேகரன் (27-May-14, 1:49 pm)
பார்வை : 289

மேலே